கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நிகழ்ச்சி 07-03-2026 அன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் வணிகவியல் துறை முன்னாள் மாணவி முத்து செல்வி, நிக்கி பேக்ஸ் உரிமையாளர், கோவில்பட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அவர் தனது உரையில், பெண்கள் தொழில்முனைவோராக முன்னேற முடியும் என்பதை எடுத்துரைத்து, வாழ்க்கையில் வளர்ச்சி பெற உழைப்பும் பொறுமையும் மிகவும் அவசியம் என்று விளக்கினார். மேலும், பெண்கள் அனைத்து துறைகளிலும் திறமையுடன் சாதிக்கக் கூடியவர்கள் என்பதையும் கூறி மாணவிகளை ஊக்கப்படுத்தினார்.

தொடர்ந்து மாணவிகளுக்கான நடனம் மற்றும் பேஷன் ஷோ போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கணினி அறிவியல் துறை மாணவிகள் கைப்பற்றினர்.

விழா ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் வழிகாட்டுதலின் படி,மகளிர் தின ஒருங்கிணைப்பாளர் தலைமையில், ஆசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவிகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.