சமூக நலனில் முக்கிய பங்கு : கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இஆப

சமூக நலனில் முக்கிய பங்கு :
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இஆப

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய தன்னார்வ இரத்ததான தினம் 2025-ஐ முன்னிட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான விழா மற்றும் பாராட்டு நிகழ்வை நடத்தியது.

சமூக நலனில் முக்கிய பங்கு வகித்த கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இரத்ததான முகாம்களை தொடர்ந்து நடத்தி பலரின் உயிர் காப்பில் பெரும் பங்காற்றியதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

சான்றிதழை கல்லூரி முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கீதாராணி இணைந்து பெற்றுக்கொண்டனர்.

இரத்ததான முகாமின் போது, கல்லூரி தாளாளர் விஜயன் “குருதி கொடை – உயிர்க்கொடை” என்ற தலைப்பில் ஊக்கமூட்டும் சிறப்புரையாற்றி, இரத்ததானத்தின் மகத்துவத்தை விளக்கி, மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அவரது உரை மாணவர்களின் மனதில் மனிதநேய உணர்வை தூண்டி, தன்னார்வச் செயல்பாடுகளுக்கு பெரும் ஊக்கம் அளித்தது.

நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் என அனைவரும் இணைந்து பங்கேற்றனர்.