காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் “உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் “உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா:
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 12.02.2026 அன்று காலை 10.30 மணியளவில், “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் சார்பில் மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழா கல்லூரி நிறுவனர் தலைவர் அல்ஹாஜ் வாவு செய்யிது அப்துர் ரகுமான், கல்லூரி செயலர் ஹாஜி வாவு மொகுதஸீம், துணைச் செயலர் ஹாஜி ஹாபிஸ் வாவு அகமது இஸ்ஹாக் ஆலிம், நிர்வாக உறுப்பினர் வாவு மொகுதூம் இஸ்மாயில் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

விழாவின் சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறை,மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும், வருவாய் கோட்டாட்சியர் கௌதம், திருச்செந்தூர் வட்டாட்சியர் பொன்மாரி, நகர்மன்ற துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, நகர்மன்ற உறுப்பினர் சுகு (எ) ரங்கநாதன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் கலீல் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர். ரஹ்மத் ஆமினா பேகம் சிறப்பு விருந்தினர்களை வாழ்த்திப் பேசினார். கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர்.அருணா ஜோதி வரவேற்புரை வழங்கினார்.

விழாவின் இரண்டாம் கட்டமாக, கணிதத்துறை உதவிப் பேராசிரியர் அனிதா பிளஸ்ஸி ராணி மாணவியர்களுக்கான “புதுமைப்பெண்” திட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் செல்வி.சூர்யா மடிக்கணினியின் பயன்பாடுகள் மற்றும் அதன் கல்வி முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.

மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி செல்வி.பாத்திமா அப்ரா மற்றும் மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி செல்வி.சுதிக் ஷா ஆகியோர் தமிழ்நாடு அரசு மாணவியருக்காக அறிமுகப்படுத்திய சிறப்பு திட்டங்கள் மற்றும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் பயன்கள் குறித்து உரையாற்றினர்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஹெலன் நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் கல்லூரி நிர்வாகத்தினரும், சட்டமன்ற நிர்வாகிகளும், பேராசிரியர்களும், மாணவியரும் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆயிஷா செய்திருந்தார்.