சாயர்புரம் டாக்டர். ஜி.யூ. போப் கல்வியியல் கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம், டாக்டர். ஜி.யூ. போப் கல்வியியல் கல்லூரியில் 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு மாணவி சேரன் சுவீட்டி வரவேற்புரை ஆற்றி
தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் விரிவுரையாளர்
சீதா லட்சுமி கலந்து கொண்டார். அவர் போதைப்பொருள் பற்றிய மிக முக்கியமான மற்றும் பயனுள்ள பல சிந்தனைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அதில் சில முக்கிய கருத்துகள்:
போதைப்பொருள் மனித நடத்தையை எவ்வாறு மாற்றுகிறது.
போதைப்பொருள் பழக்கத்திற்கு முக்கிய காரணங்கள் என்னென்ன?
போதைப்பொருள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
போதைப்பொருள் தடை செய்யப்பட்டிருப்பது ஏன்?
போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகும் காரணங்கள் மற்றும்
யார் யாருக்கு போதைப்பொருள் பழக்கம் ஏற்படுகிறது,
போதைப்பொருள்களின் வகைகள் பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் விழிப்புணர்வு குறித்து பேசியபோது:
சில முக்கிய மேற்கோள்களைப் பகிர்ந்தார்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவர்களிடம் இந்த விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது என்றும் அதன் அவசியத்தையும் விளக்கினார்.
இந்தியாவில் 1985-ஆம் ஆண்டு போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (Narcotic Drugs and Psychotropic Substances Act) இயற்றப்பட்டது என்றும், போதைப்பொருள் ஒழிப்புஅரசு பொறுப்பு அல்ல – தனிமனிதனின் பொறுப்பு என்றும் கூறினார்.இதைத் தொடர்ந்து விரிவுரையாளர் லீதியால் ராஜசெல்வி முன்னிலையில், கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியை முடித்து வைத்து இரண்டாம் ஆண்டு மாணவி மரகத லட்சுமி நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வு மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகளை உணர்த்துவதிலும், தனிநபர் பொறுப்புணர்வை வளர்ப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.













