கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் 284 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளியில்ன் 09.02.2026 அன்று காலை 11.00 மணியளவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் தலைமையில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். கோவில்பட்டி மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) மரிய ஜான் பிரிட்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 284 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களின் ஒழுக்கம், கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
பட்டதாரி ஆசிரியயை முத்துச்செல்வி நன்றி கூறினார். முதுகலை ஆசிரியை வளர்மதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.












