தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் தின விழா
தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தூத்துக்குடி நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாலவராஜ் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சங்கத்தின் செயலாளர் சரவணன் மாணவர்களுக்கு சிறுசேமிப்பு இன்றைய தேவை எனக் கூறி உண்டியல்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கினார்.
தூத்துக்குடி நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெற்கு புதுத் தெரு மாநகராட்சி பள்ளியின் தேவைக்காக அகுஜா போர்ட்டபிள் ஆம்ப்ளிபையர் மைக்குடன் வழங்கி கல்வி வளர்ச்சிக்கு உதவினார்கள்.
மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி , பாட்டுப் போட்டி போன்றவைகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஜான்சி தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் தூத்துக்குடி நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் அமிர்த பாண்டியன், துணை செயலாளர் சரவணன் , பொன்னுத்துரை, சுலைதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் ,
ரத்னா, விஜயலட்சுமி, ஜான்சி ராணி, உஷா சாந்தினி, பவானி பத்மா மற்றும் சுகுணா (AI) ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.












