கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ரெட் ரிப்பன் கிளப் (RRC) சார்பில் HIV மற்றும் AIDS விழிப்புணர்வு முகாம் மற்றும் மனிதச் சங்கிலி பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கல்லூரித் தாளாளர் விஜயன் ரெட் ரிப்பன் கிளப் பலகையை திறந்து வைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி சிறப்புரையாற்றி, HIV மற்றும் AIDS குறித்து இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் அவசியம் என்றும், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மேலாளர் வேலையா HIV மற்றும் AIDS நோயின் பரவல், தடுப்பு முறைகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் தவறான நம்பிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார். சாந்தா , நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் கருணை, மனிதநேய அணுகுமுறை மற்றும் சமூக ஆதரவு அவசியம் என்பதைக் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மாற்று தடுப்பு மேற்பார்வையாளரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் பொறுப்பாளர் முத்துராஜா செய்திருந்தார். நிகழ்ச்சியின் நிறைவாக, தமிழ் துறை உதவி பேராசிரியர் பாரதி நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகம் முழுவதும் மனிதச் சங்கிலி பேரணி நடத்தப்பட்டு, HIV மற்றும் AIDS குறித்த விழிப்புணர்வு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் எடுத்துச் செல்லப்பட்டது.












