செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி :
ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 53 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













