சிபிஎஸ்சி 10வது தேர்வு முடிவுகள் 2025 மே 6 நாளை காலை வெளியாகுமா?
CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025: எப்போது வெளியீடு?
CBSE பொதுவாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்கும். கடந்த ஆண்டுகளின் அடிபடையில், 2025 ஆண்டின் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதத்தின் கடைசி வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சற்று முன் வெளியான தகவலின் படி மே 5 ஆம் தேதி, 2025 அதாவது இன்று தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் மே 6ஆம் தேதி நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளிவரலாம் என்ற தகவலும் பரவிக் கொண்டிருக்கிறது.
எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
முடிவுகளை எப்படி பார்ப்பது?
சிபிஎஸ்இ இன் தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் மாணவர்கள் சரிப்பார்க்கலாம். மேலும் results.cbse.nic.in, cbseresults.nic.in மற்றும் cbseservices.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மே 2ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல் பரவிய நிலையில், அதை சிபிஎஸ்இ நிர்வாகம் மறுத்தது. மேலும் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரையில், தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.












