தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி SAV மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பின் அவசியம், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.

போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் பாலன், தலைமை காவலர் எபெனேஷ் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தி, மாணவர்களுக்கு போக்குவரத்து நடைமுறை விளக்கங்களையும் வழங்கினர்.
மேலும் சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு பேரணி பள்ளி வளாகத்திலிருந்து நடைபெற்றது. இதில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் (ஒருங்கிணைப்பாளர்) செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்ததோடு, சமூகத்தில் பாதுகாப்பான போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றும் எண்ணத்தையும் ஊட்டியது.













