நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு : கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் வெளியீடு :
கோவில்பட்டி கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாதனை

ஏப்ரல் 2025ல் நடைபெற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வில், கே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், பிரியதர்ஷினி வணிகவியல் தொழிற்சார்கணக்கு வைப்புமுறைதுறை, ஷன்மதி முதுகலை நுண்ணறிவியல் துறை, லக்க்ஷனா முதுகலை கணிணி அறிவியல் துறை ஆகிய பாடப்பிரிவில் முதலிடம் பெற்று பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர். ஆர்.என்.ரவியிடம் இருந்து தங்கப்பதக்கம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

தங்கப்பதக்கம் பெற்ற மாணவிகளை கல்லூரியின் தலைவர், துணைத்தலைவர், கல்லூரியின் தாளாளர், முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினர்.