- தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பாக கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் தாளமுத்துநகர் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பாக கதை சொல்லும் நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அற்புத மணி மரியதாஸ் இல்லத்தில் ஞாயிறு காலையில் பாக்கியம் கடவுள் வாழ்த்து பாடி லாரன்ஸ் தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற தருவைக் குளம் கிளை செயலாளர் தலைமையில் தான் படித்த சிறந்த கதைகளை சொன்னார்.
சார்லஸ் புஷ்பராஜன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் ) ஜெயம் மற்றும் பேட்ரிக் கதைகளை சொன்னார்கள். செல்வின்,அன்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர். ரவி தமிழ்நாடு கலை இலக்கிய மன்ற தாளமுத்துநகர் கிளை செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளர் நன்றியுரையாற்றினார்.












