தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தினம் கொண்டாட்டம்

தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தினம் கொண்டாட்டம்

தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் 26.01.2026 அன்று 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்குப் பள்ளித் தாளாளர் டாக்டர். விவேகானந்தன், செயலாளர் விவேகம் டாக்டர். ரமேஷ் மற்றும் டாக்டர். சுனிதா ரமேஷ் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினராக பொன் வெங்கடேஷ் கலந்து கொண்டு நம் பள்ளி மாணவர்கள் தேசியப்பற்றோடு அனைத்துப் பாடல்களையும் பாடியதற்காகப் பாராட்டி குடியரசு தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.

2025-2026 கல்வியாண்டில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குக் கேடயம் வழங்கி பள்ளி நிர்வாகி செல்வி. வினுஸ்ரீ மற்றும் பள்ளி முதல்வர் சுப்புலெட்சுமி வாழ்த்தினார்.

மாணவர்களிடம் நாட்டுப்பற்றை ஊட்டும் விதத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.