தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி நகர்ப்புறம் வடக்கு பத்திரகாளியம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
26 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரிய கீதா மற்றும் தலைமை ஆசிரியை தங்கமணி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்கள்.

மாணவ மாணவிகள் மாறுவேட போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். மேலும் தேச பக்தி ஊட்டும் பாடலுக்கு நடனம் ஆடினர். பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பெற்றோர்கள் மற்றும் SMC உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கி விழா முடிவடைந்தது.













