கீழ ஈரால் தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கீழ ஈரால் தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி செயலர் அருள் தந்தை ராஜதேவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர். பிரபு மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ரஸாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எட்டையாபுரம் அகமத் ஜலால் மற்றும் கோவில்பட்டி. சங்கரநாராயணன் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமத்துவ கிறிஸ்மஸ் நிகழ்வில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்த கலை நிகழ்ச்சியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குறித்த கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் அரங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றுகையில் மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் இந்த சமத்துவ கிறிஸ்மஸ் நிகழ்வானது உங்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை என சிறப்புரையாற்றினர். மேலும் கல்லூரி பசுமை இயக்கம் சார்பாக இயற்கையும் கிறிஸ்து பிறப்பும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட குடில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் முனைவர். சிவசங்கரி வரவேற்புரை நல்கினார். வணிகவியல் துறை பேராசிரியர் கார்த்திக் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஏற்பாடுகளை அருட்தந்தை திவ்ய அலெக்ஸ் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் செய்திருந்தனர். மேலும் அருட்தந்தையர்கள் அருள்ராஜ்,செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.