தூத்துக்குடி வ. உ. சி.கல்வியியல் கல்லூரியில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி வ. உ. சி.கல்வியியல் கல்லூரியில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி வ.உ. சி. கல்வியியல் கல்லூரியில் 77 வது குடியரசு தினவிழா 26.1.26 அன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது. விழாவிற்கு வ உ சி கல்விக் கழக உறுப்பினரும் தூத்துக்குடி கனநீர் ஆலையின் முன்னாள் விஞ்ஞானியுமான வேணுகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் கனகராஜ் தங்கவேல் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில் இந்திய குடியரசு தின விழாவின் முக்கியத்துவத்தை வருங்கால ஆசிரிய மாணவர்களுக்கும் எடுத்துரைத்தார். மேலும் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலமாகும். இந்தியா எனக்கு என்ன செய்தது என்று கருதாமல் இந்தியாவிற்கு நாம் என்ன செய்தோம் என்ற ஜவஹர்லால் நேருவின் வைர வரிகளை சுட்டிக்காட்டினார்.

மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு பின்னர், பேராசிரியர் முனைவர் பிரேமலதா அனைவருக்கும் நன்றி கூறினார்.