தூத்துக்குடி வ உ சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி: ராஜபாளையம் நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாம்பியன்
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி 23.1.26 மற்றும் 24.1.26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
கைப்பந்து போட்டியில் 7 பள்ளிகளைச் சார்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

24.1.2026 அன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்க்கு கல்லூரி செயலர் திரு ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வரவேற்புரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் ரமேஷ் குமார் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுத் தொகை, பதக்கங்கள், சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

கைப்பந்து போட்டியில் ராஜபாளையம் நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும், தூத்துக்குடி பி.எம்.சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது.
விழாவின் நிறைவாக உடற்கல்வி இயக்குனர் முனைவர். சிவஞானம் நன்றியுரை வழங்கினார்.













