தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 16-ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியின் தேசிய நாட்டு நலப்பணி த் திட்டம் அலகு எண்–70 மற்றும் நிலத்தியல் துறை இணைந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி 23.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடத்தியது.

இந்தப் பேரணியை வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு மற்றும் தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணிக்கு முன், வ.உ. சிதம்பரம் கல்லூரி உதவிப் பேராசிரியர் டாக்டர் செல்வம் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை மாணவர்கள் எடுத்துக்கொண்டனர்.

பேரணி வ.உ. சிதம்பரம் கல்லூரியிலிருந்து தொடங்கி இசக்கியம்மன் கோவில் வரை நடைபெற்றது.

துணை தாசில்தார் (மண்டல), சுப்பையா; தேர்தல் துணை தாசில்தார், ஜெயகிருஷ்ணன்; வருவாய் ஆய்வாளர் (தாலுகா), முத்துக்குமார்; தேர்தல் உதவியாளர், சக்திராஜா; தேர்தல் கணினி இயக்குநர், ராஜித்; மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பேரணியின் முக்கிய நோக்கம் வாக்குப்பதிவின் முக்கியத்துவம், நேர்மையான மற்றும் பொறுப்பான தேர்தல் பங்கேற்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஜனநாயக மதிப்பீடுகளையும், வாக்காளர் பொறுப்பையும் வலியுறுத்தும் பதாகைகள் மற்றும் பலகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பேரணியுடன் இணைந்து செயல்பட்டனர்.

பேரணியில் வாக்காளர் பங்கேற்பின் முக்கியத்துவம் அச்சமற்ற மற்றும் நேர்மையான வாக்குப்பதிவு பற்றியும் வலியுறுத்தப்பட்டது,

பேரணி, பொதுமக்களுக்கு ஜனநாயகக் கடமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், மாணவர்களில் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்க உதவியது.