தூத்துக்குடி கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அரசாணை எண் 5ன் படி (11.01.2021) அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கி வருவது போல் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் பணி மேம்பாடு (CAS)ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கிட கோரி தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் தூய மரியன்னை கல்லூரி பேராசிரியர்கள் கடந்த புதன்கிழமை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
குறிப்பு :
CAS (Career Advancement Scheme) ஊதியம் என்பது கல்வித்துறை (பல்கலைக்கழகம், கல்லூரி) பேராசிரியர்கள் மற்றும் சில அரசு ஊழியர்களுக்கு, குறிப்பிட்ட பணிக்காலம் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் (ஆராய்ச்சி, பாடத்திட்டம்) பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வை வழங்கும் ஒரு திட்டமாகும்.

இது வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வுக்கு அப்பால், திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
இது பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தகுதியை உயர்த்துதல் மற்றும் பதவி உயர்வை உறுதி செய்வதின் மூலம் அவர்களின் அதிக ஊதிய விகிதம் (Grade Pay) மற்றும் பதவி உயர்வு (எ.கா., அசிஸ்டன்ட் புரொபசர் to அசோசியேட் புரொபசர்) வழங்க வழிவகுக்கிறது.
வழக்கமாக, இந்தத் திட்டம் நீண்ட காலப் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு உயர்மட்ட ஊதிய நிலைகளை எட்ட வழிவகுக்கிறது.












