தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா.
தூத்துக்குடி மீளவிட்டான் ரோடு, டிலைட் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா
கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் மாணவர்கள் படை சூழ ஆசிரியைகள், பள்ளி நிர்வாகத்தினர், முன்னிலையில் பொங்கலிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு இடையே பல்வேறு வகையான பராம்பரியமிக்க பாட்டு, நடனம் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று விளையாடினர்.
ஆசிரியர்கள் உரி அடித்தல் மற்றும் கயிறு இழுத்தல் போட்டிகளில் பங்கேற்று விளையாடினர். தைப்பொங்கல் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை ஆசிரியை விளக்கினார்.
பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி சிறப்புரையாற்றி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பள்ளித் தலைவர் ஜெய சீலன், பள்ளித் தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா ஆகியோர் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர்.












