தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் 69 – வது பட்டமளிப்பு விழா : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.சந்திரசேகர் பட்டங்களை வழங்கினார் !

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் 69 – வது பட்டமளிப்பு விழா :
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.சந்திரசேகர் பட்டங்களை வழங்கினார் !

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் 69-வது பட்டமளிப்பு விழா 26.05.2026 ல் வ.உ.சிதம்பரம் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சி இறைவணக்கப் பாடலுடன் தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஜ் அனைவரையும் வரவேற்று, கல்லூரி அறிக்கையினை வாசித்தார்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்லைக்கழக துணைவேந்தர்.பேராசிரியர், முனைவர்.சந்திரசேகர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் 238 மாணவர்கள் இளங்கல்வியியல் (B.Ed.) பட்டமும், 3 மாணவர்கள் முதுநிலை கல்வியியல் (M.Ed.) பட்டமும் பெற்று உறுதி மொழியேற்றனர்.

இவ்விழாவில் வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை பேராசிரியர்களும், மாணவர்களும், அலுவலகப் பணியாளர்களும் செய்திருந்தனர். இறுதியாக தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.