கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு :
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக தேசிய சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது.

பள்ளிச்செயலர் அட்வகேட் செல்வம், பொருளாளர் பாஸ்கர், பள்ளி செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், செல்வம், கண்ணன், ரவி மாணிக்கம் மற்றும் பொன்ராமலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பள்ளி முதல்வர் மற்றும் பொறுப்பாசிரியர் மேற்பார்வையில் மரக்கன்றுகள் நடப்பட்டு அரசு வழங்கிய சுற்றுச்சூழல் உறுதிமொழிஎடுக்கப்பட்டது.

இதில் பசுமைப் படை மாணவ – மாணவிகள், பள்ளி முதல்வர் பிரபு, பொறுப்பாசிரியர்கள் ரேகா, ராஜ ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட கருத்துகளை பேசினர், திரளான மாணவர்கள் சுற்றுச்சூழல் ஓவியங்கள் வரைந்தும், விழிப்புணர்வு வாசகங்களும் எழுதி வந்திருந்தனர். ஆசிரியர் காளீஸ்வரி நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.












