திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய குளிர் காலப் பள்ளி திட்டத்தில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய குளிர் காலப் பள்ளி திட்டத்தில் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி, வ.உ. சிதம்பரம் கல்லூரி இயற்பியல் துறை மாணவர்கள் திருவனந்தபுரம், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 19 நாட்கள் நடத்திய இயற்பியல் துறை குளிர் காலப் பள்ளி திட்டத்தில் பங்கேற்றனர்.

இரண்டாம் ஆண்டு முதுகலை இயற்பியல் மாணவிகள் ஆரோக்கிய மாலினி, வைஷ்ணவி, சுதா மற்றும் கார்த்திக் ஆகியோர் இப்பயிற்சியில் கலந்து நிறைவு செய்துள்ளார்கள்.

நாடு முழுவதிலிருந்து 50 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில், வ.உ.சி கல்லூரியிலிருந்து நான்கு மாணவர்கள் தேர்வாகியிருப்பது பெருமைக்குரியதாகும்.

இந்த சாதனையைப் பாராட்டி கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு, மாணவர்களுக்கும். மேலும், மாணவர்கள் இந்த வாய்ப்பை நாடி முயற்சிக்க ஊக்கமளித்த ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.