அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதுகலை முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி துவங்குகிறது
தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் ( 31 – 07 – 2025 ) நிறைவு பெற்ற நிலையில், மாணவர்களின் நலன் கருதி முதுகலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுவரை விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, வருகிற 11- ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவு கலந்தாய்வு வருகிற 13-ஆம் தேதி முதல் தொடங்கும்.
முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












