தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பேச்சுத் திறன் ஹிந்தி ( ஸ்போக்கன் ஹிந்தி ) வகுப்புகள் ஆரம்பம்
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 30 நாட்கள் பேச்சுத் திறன் ஹிந்தி வகுப்புகள் – 2025, செப்டம்பர் 11 ஆம் தேதி கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு வழிகாட்டிதலின்படி தொடங்கியது.
மொத்தம் 110 மாணவர்கள் பல்வேறு துறைகளிலிருந்து இணைந்து, இதில் பங்கேற்று வருகின்றனர். மாணவர்களின் தொடர்புத்திறனை மேம்படுத்தவும், மொழித்திறனை கட்டியெழுப்பவும், பயனுள்ள நடைமுறை பேச்சுத் திறன் ஹிந்தி பயிற்சியை வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது மாணவர்களுக்கு கல்வியிலும் எதிர்கால தொழிலிலும் பெரும் பலனளிக்கும்.
இந்த முயற்சி கல்லூரியின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பண்பாட்டு புரிதலை வளர்த்தல், மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவித்தலை வெளிப்படுத்துகிறது.













