தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு .

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு .

தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியின் ஈகோ பெமினின் எக்சலன்ஸ் (Eco Feminine Excellence) பிரிவு, வீராங்கனை அமைப்பு, மக்கள் குடியுரிமை சங்கம் (PUCL) உடன் இணைந்து, “Upgrading Climate Action for a Greener and Safer Future – SDG 13” எனும் தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கினை அக்டோபர் 17, 2025 அன்று கல்லூரி மாநாட்டு அரங்கில் நடத்தியது.

முனைவர். பியூலா ஜெர்லின், இயக்குனர் ஈகோ பெமினின் எக்சலன்ஸ் மற்றும் தாவரவியல் துறை உதவி பேராசிரியை, வரவேற்பு உரை ஆற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். அருட்சகோதரி ஜெஸ்ஸி பெர்னாண்டோ தலைமை உரையில், “காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். உயிரிசை (biodiversity) காப்பதே மனிதனின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும்” என்று வலியுறுத்தினார்.

முதன்மை உரையை அரசு வழக்கறிஞர் வெற்றி செல்வன் (பூவுலகின் நண்பர்கள்) வழங்கினார். அவர் தனது “Planetary Health and Climate Justice” என்ற உரையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமூக நீதி உறுதியும் ஒன்றோடொன்று இணைந்தவை எனக் கூறினார்.

சிறப்பு உரை – I ஐ பேராசிரியர் பாத்திமா பாபு, சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் முன்னாள் ஆங்கிலப் பேராசிரியர், வழங்கினார். “A Feminist Perspective on Climate Action” என்ற தலைப்பில் பெண்களின் பங்கு பசுமை உலகை உருவாக்குவதில் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தினார்.

சிறப்பு உரை – II ஐ முனைவர். அருட்தந்தை செல்வராஜ், மக்கள் குடியுரிமை சங்கத் தலைவர், வழங்கினார். அவர் “Climate Resilience and Conservation – Urgent Need for Current Scenario” என்ற தலைப்பில், தற்போதைய சூழலில் உயிரிசை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

பல கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.. இந்த கருத்தரங்கு, இயற்கையை நேசிக்கவும், உயிரினப் பல்வகைமையை காக்கவும், நிலையான (sustainable) வாழ்க்கை முறையை கடைபிடிக்கவும் அனைவருக்கும் ஊக்கமளித்தது