கோவில்பட்டி கே ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
விழிப்புணர்வு நிகழ்ச்சி :
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக உலக நுண்ணுயிர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பனிரெண்டமாம் வகுப்பு உயிரியல் பிரிவு மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தலைமை வகித்தார், துறைத் தலைவர் கருத்துரையாற்றி பயிற்சி பட்டறையின் நோக்கத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இத்துறை பேராசிரியர் முனைவர்.சஞ்சீவ்குமார் நுண்ணுயிர் எதிர்ப்பு கூறுகள், அதன் எதிர்ப்பு விளைவுகள் மற்றும் அவற்றை கண்டறிதல் முறைகளைப்பற்றி மாணாக்கர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து இத்துறை சார்ந்த முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் பள்ளி மாணாக்கர்களுக்கு செய்முறை தேர்விற்கான நெறிமுறைகள் மற்றும் பல்வேறு ஆய்வுமுறைகளை காட்சிப்படுத்தி விளக்கினார்கள்.
இந்நிகழ்வை கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் வழிகாட்டுதலின்படி துறை பேராசியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.












