கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான தொடக்க விழா!

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான தொடக்க விழா!

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சித் திட்டம் 24-06-2026 முதல் கல்லூரி கருத்தரங்க அரங்கில் கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் தனது வாழ்த்துறையில், மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் முதலாவதாக ஒழுக்கத்தை கடை பிடிக்கவேண்டும். என்றும், நன்றாக படித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து துறை தலைவர்களும் தங்களது துறைகளின் வளர்ச்சிகள் குறித்து விளக்கி கூறினர்.
சிறப்பு விருந்தினராக, கோவில்பட்டி தியான் மருத்துவமனை மருத்துவர் சிவகுமார்கலந்து கொண்டார். அவர் தனது உரையில் மாணவர்களின் கனவுகள் மெய்ப்பட, அவற்றை தினமும் மனதில் காட்சிப்படுத்த வேண்டும், சமூக வலைதள பயன்பாட்டைக் குறைத்து, இலக்கில் கவனம் செலுத்த மாணவர்கள் முயற்சி செய்ய வேண்டும், தங்களை நம்ப வேண்டும், கனவு காணவேண்டும், இவற்றை செய்தால் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

மேலும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த செசிலின் வினோத் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்பாட்டின் தீமைகள் மாணவர்களின் சமூகப் பொறுப்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதை இல்லா இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் கோவில்பட்டி, அரசு மருத்துவமனை மருத்துவர் பினா வடவ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு எளிய உடற்பயிற்சிகளை செய்து காட்டி, உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், மன அழுத்த மேலாண்மை (ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்) குறித்து உரையாற்றி, மன அழுத்தத்தை திறம்பட கையாளும் வழி முறைகளை விளக்கி கூறினார்”.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி முதல்வர், உள் தர உறுதி பிரிவு (IQAC) ஒருங்கிணைப்பாளர் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.