கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “போதை இல்லா தமிழகம்” விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “போதை இல்லா தமிழகம்” விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில்    இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் “போதை இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முதல் நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி தலைமையேற்றார்.

கோவில்பட்டி மேற்கு மண்டல காவல் உதவி ஆய்வாளர் (Sub Inspector ) சண்முகம் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்து மாணவர்களை பாராட்டினார்.

கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல், மன மற்றும் சமூக பாதிப்புகளை விளக்கும் பதாகைகள் ஏந்தி,கோஷங்களை எழுப்பியபடி நகர்முழுவதும் நடைபயணம் மேற்கொண்டனர்.

பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி அமைந்தது.


பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் “போதை வேண்டாம் – நல்ல வாழ்க்கை வேண்டும்”, “இளைஞர் விழிப்பு – சமூக வளர்ச்சி” போன்ற கோஷங்களை எழுப்பி சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் கீதாராணி, Anti-Drug ஒருங்கிணைப்பாளர்கள் கனகம் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த பேரணியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, போதை இல்லா சமூகத்தை உருவாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.