தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வினாடி வினா போட்டி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வினாடி வினா போட்டி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, வேதியியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை, வேதியியல் வினாடி வினா மன்றம் சார்பில், மாணவர்களுக்காக வேதியியல் அடிப்படையிலான வினாடி–வினா போட்டி 22.12.2025 அன்று நடத்தப்பட்டது.

முன்னோட்ட சுற்றில் 51 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் இருந்து 8 மாணவர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மூன்றாம் ஆண்டு இளநிலை அறிவியல் மாணவர்கள் ஆதித்யா மற்றும் சுனில் குமார் முதலிடம் பெற்றனர்.

முதுகலை முதலாம் ஆண்டு இளநிலை அறிவியல் மாணவி சிவ மரகத ராஜம் மற்றும் முதலாம் ஆண்டு இளநிலை அறிவியல் மாணவர் மணிகண்டன் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு முனைவர். முத்துச்சுடர் கொடி வரவேற்புரை வழங்கினார். முதல்வர் முனைவர்.வீரபாகு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட இத்தகைய செயல்பாடுகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
முனைவர். ஜெசிக்கா பெர்னாண்டோ வினாடி–வினா நடத்துநராக செயல்பட்டார். முனைவர்.ஷீபா தவமணி தொழில்நுட்ப ஆதரவு வழங்கினார்.

வேதியியல் துறையின் அனைத்து முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.