இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் 20.12.2025 – சனிக்கிழமை வேலைநாளாக அறிவிப்பு.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் 20.12.2025 – சனிக்கிழமை வேலைநாளாக அறிவிப்பு.

இராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு 03.12.2025 அன்று மழையின் காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடுசெய்யும் பொருட்டு அரக்கோணம் மற்றும் நெமிலி தாலூக்காவிற்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளுக்கும் ( 20.12.2025 ) வரும் சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக செயல்பட அறிவிக்கப்படுகிறது.

புதன் கிழமை கால அட்டவணை பின்பற்றப்பட வேண்டும் என இது குறித்த சுற்றறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர்கள் ( இடைநிலை கல்வி தொடக்கக்கல்வி தனியார் பள்ளிகள் ) தலைமை ஆசிரியர்கள் ( அரசு,அரசு உதவி பெறும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகள்) ஆகியவர்களுக்கு ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் அனுப்பி உள்ளார்.