தூத்துக்குடி வ . உ.சிதம்பரம் கல்லூரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக 4.9.2025 வியாழக்கிழமை மாபெரும் தமிழ் கனவு நிகழ்வானது தூத்துக்குடி வ .உ. சிதம்பரம் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

விழாவிற்கு திருநெல்வேலி மண்டல இணை இயக்குனர் முனைவர். விக்டோரியா தங்கம் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அதிகாரி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் முனைவர். பாரதி கிருஷ்ணகுமார் சொற்பொழிவாற்றினார். மாபெரும் தமிழ் கனவு நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர். ராமமூர்த்தி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். சந்தன மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தலைமையில், கல்லூரி இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜாக்சன் செய்திருந்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 1000 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.













