பாளை தூய சவேரியார் கல்லூரியில்
40 வருடங்களுக்கு முன் படித்த மேனாள் மாணவர்கள் சந்திப்பு
நெல்லையில் நூற்றாண்டு கண்ட தூய சவேரியார் கல்லூரியில் மேனாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் காட்வின் ரூஃபஸ் தலைமை தாங்கினார்.
1985-87 கல்வி ஆண்டில் முதுகலைத் தமிழ் சேர்ந்து படித்த மாணவர்கள் நாற்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரியில் கூடினார்கள் . இவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் தொழிலதிபர்கள் தலைமைச் செயலகத்தில் கூடுதல் செயலர் போன்ற உயர் பதவிகளில் வேலை பார்த்து தற்போது பணி ஓய்வு பெற்று விட்டார்கள்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வ ஹரிஹரன், போப் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வெலிங்டன் பிரபாகரன், மயன் ரமேஷ் ராஜா மற்றும் பலரின் ஒருங்கிணைப்பில் இந்த கூடுகை நடந்தது

இவர்களுக்கு பாடம் நடத்திய மேனாள் பேராசிரியர்கள் பாண்டியன் மேலும் சிவசுப்பிரமணியன் முனைவர் ஜோசப் இருதய சேவியர் மற்றும் பேராசிரியர் மணி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
நாற்பது வருடங்கள் கழித்து தான் படித்த அதே கல்லூரியில் மீண்டும் சந்த்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
சவேரியார் கல்லூரியின் உள்தர மதிப்பீட்டுக் குழு இயக்குனர் பேராசிரியர் முனைவர் அழகுராஜா, நூலகர் ஜோசப் மற்றும் தமிழ்த் துறை சார்ந்த பேராசிரியர்கள் மேனாள் மாணவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .












