கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

டிட்வா புயல் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவித்திருந்த சூழலில் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு மிக கனமழை காரணமாக நாளை ( 02.12.2025 ) செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி இலங்கையை புரட்டிப் போட்டு கடந்த 2 நாட்களாக தமிழகத்தை பயமுறித்தி வந்த டிட்வா புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் மேற்கண்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை நாளையும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.