பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்று அசத்திய ஆசிரியர்கள்
பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்து ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி கோடை விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் என்ற எண்ணத்தில் செய்திகள் வெளியாகின.
மேலும் ஜூன் மாதம் 9 ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்ற செய்திகளும் உலாவி கொண்டிருந்தன.
இந்த சூழ்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் அந்த நேரத்தில் முதல்வரிடம் ஆலோசனை கேட்டு பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இருந்தாலும் ஆரம்பம் முதலே ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால் கோடை மழை அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. மேலும் தென்மேற்கு பருவமழை முன்னதாக ஆரம்பித்து விட்டதால் வெயிலின் தாக்கம் மேலும் குறைந்தது.
எனவே 36 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து 2025 – 26 ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் இன்று ஜூன் 2 ம் தேதி திங்கட்கிழமை ஆரம்பமானது.
இந்த கல்வியாண்டில் முதன்முதலாக பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை தூத்துக்குடி சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூக்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு திலகமிட்டு உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
மாணவர்கள் படுகுஷியாக தங்களது பள்ளியின் வகுப்பறைக்கு சென்றனர்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி 2025 – 2026 ம் ஆண்டின் பள்ளி திறப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்பதற்காக மாணவர்களுக்கு முன்பே பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.
மாணவர்கள் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டு தங்களது நண்பர்களை பார்த்த சந்தோஷத்தில் புன்னகையுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.













