கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் உலக கை கழுவும் தினம்

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் உலக கை கழுவும் தினம்

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தன் சுத்தம் பேண வேண்டும் என்ற நோக்கில் பள்ளித் தலைவர் அய்யனார் அறிவுறுத்தலின் படி உலக கை கழுவும்  தினம் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
அறிவியல் ஆசிரியை மங்கையர்கரசி கை கழுவும் செய்முறையை செய்து காண்பித்தும் சுத்தமாக இருக்க வேண்டிய அவசியத்தையும் மாணவ மாணவிகளிடையே எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் அனைவரும் கை கழுவுதலின் பயன்களை தெரிந்து கொண்டதுடன் நம் கைகளை
எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.