தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பசுமை மேம்பாட்டு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பசுமை மேம்பாட்டு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பசுமை மன்றம் மற்றும் இனர் வீல் கிளப் ஆஃப் தூத்துக்குடி, எஸ்.பி.ஐ.சி. நகர் ஆகியவற்றின் இணைப்பில் கல்லூரி பசுமை மேம்பாட்டு நிகழ்ச்சி (Institutional Green Development Programme) 10.10.2025 அன்று நடத்தப்பட்டது.

கே.சி. இண்டஸ்ட்ரியல் கேமிக்கல்ஸ் (பி)லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், உலகின் மிகப்பெரிய மகளிர் அமைப்பான இனர் வீல் கிளப் ஆஃப் தூத்துக்குடி, எஸ்.பி.ஐ.சி. நகர் கிளப்பின் தலைவருமான லீனா மகிமை கல்லூரி கல்விச் சேவையின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் 75 தாவர நாற்றுகளை வழங்கினார்.

இந்த நாற்றுகள் அலுவலகம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நிலத்தியல், வாணிபம் மற்றும் வணிக மேலாண்மை ஆகிய துறைகளுக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு மற்றும் இன்னர் வீல் அமைப்பினரால் வழங்கப்பட்டன.

பசுமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர் ராதிகா இந்த பசுமை வளாக முயற்சியை முன்னெடுத்து வருகின்றார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரியை வளாகத்தை பசுமையான சூழலை உருவாக்க ஊக்கப்படுத்தப்பட்டனர்.