தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வாரம் மற்றும் இயற்கை வன நாள் தினம் நிகழ்ச்சி

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வாரம் மற்றும் இயற்கை வன நாள் தினம் நிகழ்ச்சி

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் மாதம் எட்டாம் தேதி வன உயிரின வாரம் மற்றும் இயற்கை வன நாள் தினத்தன்று பத்தாம் வகுப்பு மாணவி முத்து இசக்கி தன் பிறந்தநாள் பரிசாக பள்ளி நூலகத்திற்கு புத்தகத்தை வழங்கினாள்.

மேலும் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் மரக்கன்றுகளை தலைமை ஆசிரியரிடம் கொடுத்து இவ்விழாவினை சிறப்பித்தார்கள்.

மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி பவித்ரா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவி இன்ஃபன்ட் ஜியா சொற்பொழிவு ஆற்றினார்கள்.

ஶ்ரீஹரிணி ,பால இசக்கி பாடல் பாடினர்.

பின்னர் தலைமை ஆசிரியை பல்வேறு கருத்துகளை கூறிய பின் பசுமை படை மாணவிகளையும் ,பொறுப்பு ஆசிரியை சகாய ஆனந்தி ஆகியோரை பாராட்டினார்.