பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு : பள்ளிக்கல்வி இயக்ககம் – செய்திக் குறிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு :
பள்ளிக்கல்வி இயக்ககம் – செய்திக் குறிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC    2024 ம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II A ( நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள் ) தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வித்துறையில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு 06.10.2025 (திங்கள்கிழமை) அன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய வழியாக (google meet) நடைபெறவுள்ளது.

எனவே . மேற்படி உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் தங்களுடைய தெரிவு கடிதத்தில் (Selection Letter) குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 06.10.2025 அன்று காலை 10.00 மணியளவில் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது . மேற்காண் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்கள் TNPSC Selection Letter  மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் ஒரு நகலினை (மேலொப்பம் Attested copy ) சரிபார்ப்புக்கு எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .

நாள் : 03.10.2025 பள்ளிக் கல்வி இயக்குநர்