தூத்துக்குடி தருவைக்குளத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்றது

  • தூத்துக்குடி தருவைக்குளத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு போட்டிகள் நடைபெற்றது.
  • தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பேச்சுப் போட்டி மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் அனிட்டன் தலைமை தாங்கினார்.

தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர். அண்ட் ரூபன், பாண்டியனார் மக்கள் இயக்க தலைவர் சீனி ராஜ், மதுரை பாண்டியனார் தொழிற்சங்கம் சேகர் பாண்டியன், மற்றும் திருநெல்வேலி பொதிகை தமிழ் சங்க கவிஞர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புத்தகம் ஏன் வாசிக்க வேண்டும்? நூலகம் ஏன் செல்ல வேண்டும்? என்ற தலைப்பில் தூய மரியன்னை கல்லூரி மாணவி அஸ்வர்னிகா, சான்றா மேக்ஸ்லின் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவி மரிய ரேஷன் பேசினார்கள்.

இந்நிகழ்வில் மதுரை ராஜசேகர், சுப்பிரமணியம், கந்தசாமி, நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ்,
திரவியம்,, அசோகன், ஜெயக்குமார், சேவியர், வில்சன் தூத்துக்குடியில் இருந்து குமிழ்மனை புத்தக வண்டியின் சார்பில் சைமன், கரிசல இலக்கிய அமைப்பில் இருந்து அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

பேச்சுப் போட்டிக்கு நடுவர்களாக ஓய்வு பெற்ற ஆசிரியர் புஷ்பராஜன், ஜெயம், சைமன் பணியாற்றினார்கள்.

ஓவிய போட்டிக்கு நடுவராக தூத்துக்குடியில் இருந்து பாண்டியம்மாள் கலந்து கொண்டார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் லாரன்ஸ், அனிட்டன், திரவியம், அசோகன், ஜெயக்குமார், வில்சன் செய்திருந்தனர்.