தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட அமலோற்பவ மாதா மது ஒழிப்போர் சங்கம் நடத்திய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி(தன்னாட்சி), தூத்துக்குடி மறைமாவட்ட அமலோற்பவ மாதா மது ஒளிபோற் சங்கம், மரியன்னை கல்லூரி, NCC பிரிவு சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியை, தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதன் (ASP) கல்லூரி ஆசிரியர்கள், கேடட்டுகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தூய மரியன்னை கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி, நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாகச் சென்று, புனித பனிமய அன்னை ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது.

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் அருள்சகோதரி முனைவர். ஜெஸிஸி பெர்னாண்டோ நடத்தி வைத்து, மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்க வேண்டும் என்று ஊக்கமளித்தார்.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் சிறப்புரையாற்றி, மாணவர்களும் பொதுமக்களும் ஆரோக்கியமும் நற்பண்பும் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் தூய மரியன்னை கல்லூரி NCC கேடட்டுகள், AICUF, NSS, YRC, RRC, Anti-Drug Forum மாணவர்கள் ஆகியோர் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.












