தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் டி. சவேரியார் புரம், தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு எதிரில் நடைபெற்று வரும் மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் பகுதிநேர நாட்டுப்புற கலை வகுப்பு சார்பாக இன்று(26.9.25) சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.

இதில் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், மேலும் பகுதி நேர ஆசிரியர்கள் அலுவலக நண்பர்கள் கலை கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் புதியதாக மாணவர்களும் ஆர்வமுடன் சேர வந்துள்ளார்கள்.

விழாவில் கலை பொருட்கள்.
கலை சார்ந்த புத்தகம்..
கலை சான்றுகள்…
இசை கருவிகள்
கலை ஆடைகள்
சலங்கை போன்ற கலை ஆபகரணம் அனைத்தையும் வைத்து சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது.

நிகழ்வு ஏற்பாட்டினை பண்பாட்டு துறை தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்தனர்.
துறை ஆசிரியர்கள் உறுதுணையாக செயல்பட்டார்கள்.

மேலும் இசை பள்ளி மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் பகுதி நேர நாட்டுப்புற வகுப்பிலும் சேர விருப்பமுள்ளவர்கள் சேர்வதற்கான காலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் சொல்லி  குழு புகை படம் எடுத்துக்கொள்ளபட்டது.