தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி என். சி. சி மாணவர்கள் சார்பில் முத்து நகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் சார்பாக மொத்தம் 45 என்.சி.சி – கடற்படை பிரிவு மாணவர்கள், 20.09.2025 அன்று காலை 8.00 மணிக்கு, தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் ‘புனித் சாகர் அபியான்’ (கடற்கரை சுத்தம்) நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி 3-டிஎன் கடற்படை யூனிட் என்.சி.சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாணவர்களை பங்கேற்க ஏற்பாடு செய்த கல்லூரி என்.சி.சி – கடற்படை பிரிவு அதிகாரி லெப்டினன்ட் டாக்டர். .நிஷாந்த் – திற்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு நன்றி தெரிவித்தார்.












