தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில்
உள் விளையாட்டு அரங்கத்தின் பி வி சி தரைத்தளம் திறப்பு விழா மற்றும் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டி தொடக்கவிழா நடைபெற்றது
தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு, லால் பகதூர் சாஸ்திரி உள் விளையாட்டு அரங்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிவிசி தரைத்தளத்தின் திறப்பு விழாவும், பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியும் இன்று (23.01.2026) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி டிஎம்பி வங்கியின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பேசுகையில் இந்த திறப்பு விழாவை மிகச் சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.













