தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடத்தினர்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணி நடத்தினர்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தூத்துக்குடி சமூக மேம்பாட்டு திட்டம் (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலத் துறை இணைந்து 20.09.2025 அன்று இனிகோ நகர், தூத்துக்குடியில் பிளாஸ்டிக் எதிர்ப்பு பேரணியை நடத்தியது.

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தூய்மையான பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பேரணி நடைபெற்றது. மாணவிகள் உற்சாகமாகக் கலந்து கொண்டு, பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்வு செயலாளர் அருட்சகோதரி டாக்டர். குழந்தை தெரசா, முதல்வர் அருட் சகோதரி. டாக்டர். ஜெஸ்சி பெர்னாண்டோ, துணைமுதல்வர் அருட் சகோதரி டாக்டர் எழிலரசி, மற்றும் ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர்.செரீனா மார்கரெட் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.

சமூக மேம்பாட்டு திட்டத்தினைச் சேர்ந்த டாக்டர். ஹெர்மினா மற்றும் மெல்பா ஷேரன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

இந்தப் பேரணி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றது.