தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளியில் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோ ஜான் பால் க்கு சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளர் காமாட்சி முருகன் வரவேற்று பேசினார். ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் முருகன் தலைமை தாங்கினார். மின்வாரியத் துறை ஜே இ டேவிட் சாலமன் அலெக்சாண்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புனித அலசால் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோ ஜான் பால் – க்கு நல்லாசிரியர் விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் ஆசிரியர் தின வாழ்த்து கவிதை வாசித்து அதனை தலைமை ஆசிரியர் ஜான் பாலிடம் வழங்கினார். அருட்சகோ ஜான்பால் ஏற்புரை வழங்கினார். அருட்சகோ சேகர் நன்றி கூறினார்.












