அண்ணா பல்கலை.யில் பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 11-ல் தொடக்கம்
பொறியியல் மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அத்துடன் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைகிறது.
இந்நிலையில் பல்கலை.யின் 4 வளாக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ல் தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்குமுன் மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 5 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.

இதேபோல், பல்கலை. இணைப்பு அங்கீகாரம் இதர கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரையும், இவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் 4 வளாக கல்லூரிகள் விபரம் :
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் நான்கு வளாக பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
கிண்டி பொறியியல் கல்லூரி (CEG),
மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT),
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT),
மற்றும்
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP).
கிண்டி பொறியியல் கல்லூரி (CEG):
இது அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகமாகும், இது கிண்டியில் அமைந்துள்ளது.
மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT):
இது சென்னை தரமணி பகுதியில் அமைந்துள்ளது.
அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி (ACT):
இது காரைக்குடியில் அமைந்துள்ளது.
கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (SAP):
இது கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.
இந்த நான்கு கல்லூரிகளும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்றன.












