பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் : ஆகஸ்ட் மாதம் 12 நாட்கள் விடுமுறை

பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் :
ஆகஸ்ட் மாதம் 12 நாட்கள் விடுமுறை

ஆகஸ்ட் மாதம் 12 நாள் விடுமுறை.! கேட்கவா வேணும், கொண்டாட்டத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்.

2025-2026 பள்ளி நாட்காட்டியின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுகள் உட்பட, சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை விடுமுறைகளும் இதில் அடங்கும்.

கோடை விடுமுறை முடிவடைந்து 45 நாட்கள் கழித்து பள்ளிகள் ஜூன் மாதம் முதல் வராத்தில் திறக்கப்பட்டது. இதற்கிடையில் 2025- 2026ஆம் ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டது.

அதன் படி அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை நாட்களாகவும், மொத்த 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாகவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

மொகரம் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால். ஒரு நாள் கூடுதல் விடுமுறையும் கிடைக்காமல் போனது. எனவே ஆகஸ்ட் மாதத்திலாவது பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை கிடைக்குமா என எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு
ஆகஸ்ட் மாதம் லீவு மணி ஓங்கி அடிக்க உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 12 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது. 19 நாட்கள் மட்டுமே பள்ளி வேளைநாட்களாக உள்ளது.

இதன் படி, ஆகஸ்ட் 2, 3, ம் தேதி சனி 9 ,10ஆம் தேதி ஞாயிறு வார விடுமுறையாக உள்ளது.

ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தின விடுமுறை, ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை, ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை கிடைக்கவுள்ளது.

அடுத்தாக 23 மற்றும் 24ஆம் தேதி சனி, ஞாயிறு விடுமுறை, ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன் கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறையும், மேலும் 30,31 சனி, ஞாயிறு என்று 12 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனால் மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க உள்ளனர்.

ஆகஸ்ட் 12 நாள் விடுமுறை
எனவே மாணவர்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய இந்த ஆகஸ்ட் மாத விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலும் தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறையாக ஆகஸ்ட் 15 முதல்17ஆம் தேதி வரை வரவுள்ளது. ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை சுதந்திர தினம்,. இதனை தொடர்ந்து கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் ஞாயிறு விடுமுறை வருகிறது.

எனவே மாணவர்கள் மட்டுமல்லாது அரசு ஊழியர்களும் இந்த தொடர் விடுமுறையை நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் இந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.