தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வ..உ. சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், அலகு 68 (பெண்கள்) சார்பில், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 18-07-2025 இன்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக  சைபர் கிரைம் காவல் நிலையம்,  தூத்துக்குடி,காவல் ஆய்வாளர் சாந்தி,
தூத்துக்குடி குற்றப்புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் அபிராமி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சைபர் உலகில் ஏற்பட்டுவரும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் சிறந்த விளக்கங்களையும் தகவல்களையும் வழங்கினர்.

ஆன்லைன் மோசடிகள் மற்றும் ஏமாற்றுக்களை அடையாளம் காணும் முறைகள்   

சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக இருப்பது சைபர் கிண்டல் மற்றும் அதற்கான சட்ட விளைவுகள்.பாதுகாப்பான இணைய உபயோகத்திற்கான நடைமுறைகள் மற்றும் பொறுப்பான டிஜிட்டல் நடத்தை, மேலும், சைபர் குற்றங்களை புகாரளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும், புகார்கள் எவ்வாறு அளிக்கலாம் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தனர்.

உண்மையான வழக்குகளை எடுத்துக்காட்டுகளாகக் கூறி, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று, ஆழமான கேள்விகளை எழுப்பி, தங்களது சந்தேகங்களை பகிர்ந்தனர்.

இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்தது.