தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலை பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலை பள்ளியில்
கல்வி வளர்ச்சி நாள்

பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியை தங்கமணி வரவேற்று, காமராஜரின் பொதுத் தொண்டு பற்றியும், காமராஜர் வாழ்க்கை முறையையும் கூறி மாணவ, மாணவியர்கள் தங்களை வாழ்வில் உயர்த்திக் கொள்ள உறுதி வேண்டும் என்று கூறினார்.

மாணவர்கள் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகியவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.மேலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் ஆகியோர் காமராஜரின் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பள்ளியின் தமிழாசிரியை அமுதா நன்றி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியைகள் செய்திருந்தனர்.